ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரத்திலுள்ள பேருந்து நிலையம்ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம் இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். கொல்லம் நகரத்தின் டவுன்டவுன் பகுதியில் இது அமைந்துள்ளது, ஆண்டமுக்கம் தனியார் பேருந்து நிலையம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையம் தனியார் நகரப் பேருந்துகள் மற்றும் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்து சேவைகள் ஆகிய பேருந்துகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. சின்னக்கடைக்கு மட்டுமே இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மய்யநாடு, இளம்பள்ளூர், சக்திகுளங்கரா, சாவர, தோப்பில்கடவு, பிராக்குளம், கொட்டியம், பெருமான் மற்றும் கடவூருக்கு இணைக்கும் பல்வேறு நகரப் பேருந்துகளின் தொடக்கப் புள்ளியாக சின்னக்கடை திகழ்கிறது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் ஒரு செயல்பாட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.






